கிரிக்கெட்

2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு + "||" + Release of the Ashes Series Schedule for 2021-22

2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு

2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு
2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் என இம்முறை இரண்டு ஆஷஸ் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இம்முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து இந்த அட்டவணையை அறிவித்துள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும். இரவு பகலாக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 தொடங்கும். பாரம்பரிய பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கும். நான்காவது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் ஜனவரி 5 அன்றும், கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்றும் நடைபெறவுள்ளன.

26 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக சிட்னி அல்லாத வேறொரு மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் இறுதிப்போட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஆஷஸ் தொடர் ஜனவரி 27ஆம் தேதி கேன்பெர்ரா மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளும் மகளிர் ஆஷஸில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகல்
ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் .
2. ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட்: ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்..!
ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
3. ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
4. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.