கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் ஒப்பந்த பட்டியலில் ஷபாலி வர்மா ‘பி’ கிரேடுக்கு முன்னேற்றம் + "||" + Shabali Verma progresses to 'B' grade in women's cricket contract list

பெண்கள் கிரிக்கெட் ஒப்பந்த பட்டியலில் ஷபாலி வர்மா ‘பி’ கிரேடுக்கு முன்னேற்றம்

பெண்கள் கிரிக்கெட் ஒப்பந்த பட்டியலில் ஷபாலி வர்மா ‘பி’ கிரேடுக்கு முன்னேற்றம்
பெண்கள் கிரிக்கெட் ஒப்பந்த பட்டியலில் ஷபாலி வர்மா ‘பி’ கிரேடுக்கு முன்னேறி இருக்கிறார்.
புதுடெல்லி,

2020-21-ம் ஆண்டுக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீராங்கனைகள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து வருகிற செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்துக்கான இந்த ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 19 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இது சென்ற ஆண்டை விட மூன்று குறைவாகும். ஒப்பந்த வீராங்கனைகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ‘ஏ’ கிரேடில் இடம் பெறும் வீராங்னைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ கிரேடுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ கிரேடுக்கு ரூ.10 லட்சமும் ஊதியமாக கிடைக்கும்.

‘ஏ’ கிரேடில் 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு முதல்முறையாக ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 வயது அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா மற்றும் பூனம் ரவுத், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் ‘சி’ கிரேடில் இருந்து ‘பி’ கிரேடுக்கு முன்னேறி இருக்கிறார்கள். இவர்களுடன் இந்த பிரிவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தானியா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ‘சி’ கிரேடில் மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ராகர், ஹர்லீன் டியோல், பிரியா பூனியா, ரிச்சா கோஷ் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். வேதா கிருஷ்ணமூர்த்தி, எக்தா பிஷ்த், அனுஜா பட்டீல், ஹேமலதா ஆகியோர் தங்கள் இடத்தை இழந்துள்ளனர்.