கிரிக்கெட்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தள்ளிவைப்பு + "||" + Tamil Nadu Premier League postponed, 2020-21 league season off

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தள்ளிவைப்பு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தள்ளிவைப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுகிறது.
8 அணிகள் இடையிலான 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.