இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திலகரத்னே நியமனம்


இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திலகரத்னே நியமனம்
x
தினத்தந்தி 3 Jun 2021 1:28 AM GMT (Updated: 3 Jun 2021 1:28 AM GMT)

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திலகரத்னே நியமனம் செய்யப்பட்டார்.

கொழும்பு, 
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே நியமிக்கப்பட்டு உள்ளார். இப்போதைக்கு அவரது ஒப்பந்த காலம் ஆண்டின் இறுதிவரை போடப்பட்டுள்ளது. இது மேலும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 2022-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும், காமன்வெல்த் விளையாட்டு தகுதி சுற்றுக்கும் இலங்கை அணியை தயார்படுத்துவதே அவரது முதல் பணியாக இருக்கும். கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடாத இலங்கை பெண்கள் அணிக்கு அடுத்த சில மாதங்களில் ஒன்றிரண்டு தொடருக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 53 வயதான திலகரத்னே 1996-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர் ஆவார்.

Next Story