ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார்: தினேஷ் கார்த்திக் தகவல்


ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார்: தினேஷ் கார்த்திக் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2021 8:26 AM GMT (Updated: 2021-06-05T13:56:40+05:30)

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.  ஆனால் இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவுகிறது. 

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.  தினேஷ் கார்த்திக் இது பற்றி கூறுகையில், “

ஐபிஎல் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வர மாட்டேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இயன் மார்கன் வருவாரா என்றால் போட்டி நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. பல விஷயங்கள் மாறலாம். என்னை அணிக்குத் தலைமை தாங்கச் சொன்னால் அதற்கு தயாராக உள்ளேன்” என்றார். 

Next Story