கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + ICC Test rankings: Steve Smith replaces Kane Williamson as top-ranked Test batsman, Virat Kohli rises to fourth

டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேற்றம்
கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.
துபாய்

டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

இந்திய கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டாப் 10-இல் இருக்கும் ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி
ஒரு வீரராராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் .
2. “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” - விராட் கோலி திடீர் அறிவிப்பு
இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் கோலி, அஸ்வின் துபாய் சென்றனர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் சென்றனர்.
4. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. 3-வது டெஸ்ட்; தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறியது என்ன?
உண்மையில் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு தகுதியானதே என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.