இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பெண்கள் அணி சிறப்பான தொடக்கம்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பெண்கள் அணி சிறப்பான தொடக்கம்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:08 AM GMT (Updated: 2021-06-17T05:38:16+05:30)

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

 ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் லாரென் வின்பீல்டு ஹில், டாமி பீமோன்ட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 69 ரன்களை எட்டிய போது, தொடக்க ஜோடி பிரிந்தது. வின்பீல்டு ஹில் 35 ரன்னில் (63 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பூஜா வஸ்த்ராகர் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து நுழைந்த கேப்டன் ஹீதர் நைட்டும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். மறுமுனையில் பீமோன்ட் 66 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த நாதலி சிவெர் 42 ரன்னிலும், அமி ஜோன்ஸ் 1 ரன்னிலும் வீழ்ந்தனர். 2-வது சதத்தை நெருங்கிய ஹீதர் நைட் 95 ரன்னில் தீப்தி ஷர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சே்ாத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story