3 ஐ.சி.சி. போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு


3 ஐ.சி.சி. போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு
x
தினத்தந்தி 20 Jun 2021 11:20 PM GMT (Updated: 2021-06-21T04:50:09+05:30)

ஆன்லைன் மூலம் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) 2024-ல் இருந்து அடுத்த 8 ஆண்டுகளில் இடம் பெற்றுள்ள போட்டி அட்டவணையில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, 2028-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2031-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றை நடத்துவதற்கு உரிமை கோருவது என ஆன்லைன் மூலம் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘ஒவ்வொரு 2-3 ஆண்டுக்கு ஒரு முறை உலக கோப்பை வடிவிலான பெரிய போட்டிகளை நடத்தும் நிலையில் இந்தியா இருக்க வேண்டும். எனவே தான் இந்த 3 போட்டிகளுக்கான உரிமையை கோர உள்ளோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். கொரோனா பரவலால் வருவாய் இழப்பை சந்தித்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 10 பேர் கொண்ட கமிட்டி அமைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Next Story