கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய புதிய வழிமுறை தேவை + "||" + A new mechanism is needed to select the winner if possible in the World Test Championship draw

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய புதிய வழிமுறை தேவை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய புதிய வழிமுறை தேவை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய புதிய வழிமுறை தேவை என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சவுத்தம்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் முடியும் என்றே தோன்றுகிறது. டிராவில் முடிந்தால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். உலக போட்டியில் கோப்பை கூட்டாக பகிர்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

கால்பந்து விளையாட்டில் ஆட்டம் சமனில் முடிந்தால் வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி முறை கடைபிடிக்கப்படுகிறது. டென்னிஸ் போட்டியில் 5 செட் மற்றும் டைபிரேக்கர் கொண்டு வரப்படுகிறது.

இதே போல் வருங்காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா ஆகும் போது, இவ்விரு அணிகளில் ஒன்றை வெற்றியாளராக அறிவிக்கும் வழிமுறையை கண்டறிய வேண்டும். ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி இது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.