இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது


இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 23 Jun 2021 12:33 AM GMT (Updated: 2021-06-23T06:03:31+05:30)

இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

கார்டிப்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இலங்கை-இங்கிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கார்டிப்பில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாசன்ராய், மொயீன் அலி, டேவிட் மலான் என்று அதிரடி பட்டாளங்கள் இருப்பதால் போதிய அனுபவம் இல்லாத இலங்கைக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story