கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர்: வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகல் + "||" + Mushfiqur Rahim to miss remainder of Zimbabwe tour due to 'personal reasons

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர்: வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகல்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர்: வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகல்
ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகி உள்ளார்.
ஹராரே,

வங்காளதேச கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே ஹராரேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது. 

முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் திடீரென ஜிம்பாப்வே பயணத்தில் இருந்து விலகி நேற்று டாக்கா திரும்பினார். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 20 ஓவர் அணியில் இடம் பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து
ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
2. இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் (பகல்-இரவு), மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
3. ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிப்பு
ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.