கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி பதிலடி + "||" + 20 over cricket against West Indies: Australian team retaliates

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி பதிலடி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி பதிலடி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்தது.
செயின்ட் லூசியா,

வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் (75 ரன்கள், 4 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (53 ரன்கள், 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாசினர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ஹைடன் வால்ஷ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதனை அடுத்து இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. கடைசி ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிக்கு 11 ரன் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வீசிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் 5 பந்துகளில் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி கலக்கினார். கடைசி பந்தில் ஆந்த்ரே ரஸ்செல் சிக்சர் விளாசியும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சிமோன்ஸ் 72 ரன்கள் (48 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. 75 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.