இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு - பென் ஸ்டோக்ஸ் திரும்பினார்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு - பென் ஸ்டோக்ஸ் திரும்பினார்
x
தினத்தந்தி 22 July 2021 3:42 AM GMT (Updated: 22 July 2021 3:42 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

லண்டன், 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் அடுத்த மாதம் 4-ந் தேதியும், 2-வது டெஸ்ட் லண்டனில் 12-ந் தேதியும் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பி இருக்கிறார். டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்ட சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் அணியில் இடம் பெற்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீது 5 ஆண்டுகளுக்கு பிறகு அழைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயத்தில் இருந்து மீளாததால் அவர்களது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இங்கிலாந்து அணி வருமாறு:-

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, சாம் கர்ரன், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மார்க்வுட்.

Next Story