கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி + "||" + TNPL Cricket: Royal Kings win by 7 wickets

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்னை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்தார். 

பின்னர் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியின் சார்பில் கேப்டன் அபராஜித் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். அதில் சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஞ்சன் பால், அபராஜித்துடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தினை பதிவு செய்தனர். அந்த ஜோடியில் அபராஜித் 55 ரன்களும், ரஞ்சன் பால் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில் நெல்லை அணி 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கோவை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு
திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
5. டி.என்.பி.எல். : சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி அணிக்கு 133-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து உள்ளார்.