கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல்- கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + India in Sri Lanka: After Krunal Pandya, Yuzvendra Chahal and Krishnappa Gowtham test positive for Covid-19

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல்- கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல்- கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது
கொழும்பு

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி, 20 ஓவர் பங்கேற்றது. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, 20 ஓவர் தொடரை இந்திய அணி இழந்தது.

இதற்கிடையே, இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 2 வது 20 ஓவர்  போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. அவரும் அவருடன் தொடர்பில் இருந்த, அவர் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால், எஞ்சியிருந்த 11 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில், குருணால் பாண்ட்யாவை அடுத்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் இன்று மாலை இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.