கிரிக்கெட்

2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி + "||" + ICC Confirms It Will Bid For Cricket's Inclusion In 2028 Los Angeles Olympics

2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி

2028- லாஸ் ஏஞ்சல்ஸ்  ஒலிம்பிக் தொடரில்  கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
துபாய்,

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளன.

2028-ஆம் ஆண்டு 34-வது ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவின் லாஸ்  ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக   ஐசிசி அறிவித்துள்ளது. இதுபற்றி ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறியதாவது:  கிரிக்கெட்டிற்கு வலுவான ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவிலும் 
30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள். 

இதனால் அந்தப் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக் போட்டியில் இணைந்துகொள்ள பல அற்புதமான விளையாட்டுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கிரிக்கெட்டைச் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும். கடினமான சூழலிலும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை சிறப்பாக நடத்தி முடித்தற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
2. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
3. டி20 உலகக்கோப்பை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அபார வெற்றி
உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஓமன் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
4. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
5. 20 ஓவர் உலக கோப்பை; வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? ஐசிசி அறிவிப்பு
இந்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 56 லட்சம் டாலர்கள்(ரூ.42கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது ஐசிசி.