கிரிக்கெட்

‘தோல்வியால் துவண்டு விடமாட்டோம்’- கோலி + "||" + ‘We will not be swayed by failure’ - virat kohli

‘தோல்வியால் துவண்டு விடமாட்டோம்’- கோலி

‘தோல்வியால் துவண்டு விடமாட்டோம்’- கோலி
அடுத்த டெஸ்டில் சரிவில் இருந்து மீள்வோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லீட்ஸ், 

இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 2-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா வெறும் 78 ரன்னில் சுருண்டதால் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அடுத்த டெஸ்டில் சரிவில் இருந்து மீள்வோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். தோல்வியால் வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதே சமயம் இங்கு செய்த தவறுகளை திருத்திக்கொள்வதில் உண்மையிலேயே மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். அந்த வகையிலேயே அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன்; இறுதி போட்டியில் சிந்து தோல்வி
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
2. "கோலியை நிறுத்துங்கள், ஷமியை சமாளியுங்கள்"-ஆப்கான் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை
இந்திய அணியை வெல்ல ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவுரை வழங்கியுள்ளார்.
3. டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார்.
4. தோல்விக்கு காரணம் இதுதான்..... இந்திய கேப்டன் விராட் கோலி!
உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட மாட்டோம் - விராட் கோலி
பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட மாட்டோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.