கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை; ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேற்றம் + "||" + ICC Test Rankings: Rohit Sharma overtakes Virat Kohli to No. 5 spot, Joe Root tops batting rankings

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை; ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை; ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக ரோகித் சர்மா 5 ஆம் இடம் பிடித்துள்ளார்.   ரோகித் சர்மா இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2,909 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

 2019 அக்டோபரில் 54-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா, தற்போது 5 இடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.  இந்தப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6-ம் இடத்தில் உள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் ஜோ ரூட்டும் அடுத்த மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்மித், மார்னஸ் ஆகியோரும் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஊடகங்கள் அமைதியாக இருந்தால் போதும்...’ - கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்!
விராட் கோலியின் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.