கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான டி20; நியூசிலாந்து அணி மீண்டும் தோல்வி + "||" + BAN Vs NZ, 2nd T20: Bangladesh Beat New Zealand By 4 Runs In Dhaka Thriller, Lead Series 2-0 - Highlights

வங்காளதேசத்திற்கு எதிரான டி20; நியூசிலாந்து அணி மீண்டும் தோல்வி

வங்காளதேசத்திற்கு எதிரான டி20; நியூசிலாந்து அணி மீண்டும் தோல்வி
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.
டாக்கா, 

நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. அடுத்து 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. 

இதனால் வங்காளதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டாம் லாதம் 49 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 233-4
தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
3. பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
4. வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி
வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகினர்.
5. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 141 ரன்கள் இலக்கு
மழையின் காரணமாக ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.