கிரிக்கெட்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மலிங்கா + "||" + Lasith Malinga Retires From All Forms Of Cricket

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மலிங்கா

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மலிங்கா
டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளாரக வலம் வந்த மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து 2019- ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். இந்த நிலையில், டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  மலிங்கா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

ஓய்வு குறித்து மலிங்கா கூறுகையில், “ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும் அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.