கிரிக்கெட்

பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல் + "||" + Bangalore cricketer De Villiers scores a century in practice cricket

பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்

பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்
பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தினார்.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதற்கட்ட ஆட்டங்களில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடத்தில் உள்ளது. அமீரகத்தில் மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூரு அணியினர் அங்கு தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் மோதினர். இதில் ஹர்ஷல் பட்டேல் தலைமையிலான பெங்களூரு ஏ அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் புகுந்த டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களும் (7 பவுண்டரி, 10 சிக்சர்), முகமது அசாருதீன் 43 பந்துகளில் 66 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் தலைமையிலான பெங்களூரு பி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது, பவுண்டரியோடு நிறைவு செய்தனர். கே.எஸ்.பரத் 95 ரன்களும் (47 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) தேவ்தத் படிக்கல் 36 ரன்களும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

ஆட்டம் முடிவில் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், ‘இவ்வளவு பெரிய ஸ்கோர் சேசிங் செய்யப்படும் என்று நம்பினோம். இருப்பினும் முதல் இன்னிங்சில் டிவில்லியர்சின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. அசாருதீனும் நன்றாக ஆடினார். 2-வது இன்னிங்சில் பரத்-படிக்கல் ஜோடி 6 ஓவர்களில் 70 ரன்கள் திரட்டியது பாராட்டுக்குரிய முயற்சியாகும். மொத்தத்தில் அனைவரும் அடித்த கிரிக்கெட் ஷாட்டுகளை பார்ப்பதற்கு மிகவும் திருப்தி அளித்தது’ என்றார்.