கிரிக்கெட்

இந்தியாவில் அடுத்து நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நடைபெறலாம்: பி.சி.சி.ஐ + "||" + BCCI secretary Jay Shah signals the return of fans for India’s upcoming home series

இந்தியாவில் அடுத்து நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நடைபெறலாம்: பி.சி.சி.ஐ

இந்தியாவில் அடுத்து நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நடைபெறலாம்: பி.சி.சி.ஐ
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துவதால், அடுத்து இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகள் அதிகமான ரசிகர்களின் மத்தியில் நடைபெறலாம் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் க்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் 2021 முதல் ஜூன் 2022 வரை நான்கு டெஸ்ட், 14 டி 20, மூன்று ஒருநாள் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. வருகிற எட்டு மாத காலத்தில் நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை,தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதுடன், அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடித்தால், வருகிற போட்டிகள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.