கிரிக்கெட்

அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் .. + "||" + David warner said thanks to all fans..

அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் ..

அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் ..
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார் .
அபுதாபி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்   நேற்று  அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. 

இந்த போட்டியில் மும்பை அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.இந்த போட்டி இந்த சீசனில் ஐதராபாத் அணியின்  கடைசி போட்டி ஆகும்.

இது குறித்து சன்ரைசர்ஸ்  ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில்  பதிவு  ஒன்றை வெளியிட்டார் 

அந்த பதிவில் அவர் கூறியதாவது 

அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களாகிய  உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறந்த பயணம் என்று பதிவிட்டுள்ளார் .

செப்டம்பர் 25 அன்று  ஐதராபாத் அணிக்காக  விளையாடிய டேவிட் வார்னர் . அதன் பிறகு நடைபெற்ற  போட்டிகளில்  பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி அடுத்த 3 சீசன்களில் விளையாடுவார் என தகவல்
ஐபிஎல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
2. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் : ஜெய்ஷா
சென்னை அணிக்கு இன்று நடந்த பாராட்டு விழாவில் ஜெய்ஷா இவ்வாறு கூறியுள்ளார்
3. வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது நியாயமற்றது... பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த 20 ஓவர் உலககோப்பையின் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.
4. ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி
ஒரு வீரராராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் .
5. ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்: பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த பிராவோ சாதனையை சமன் செய்திருக்கிறார் ஹர்சல் பட்டேல்