20 ஓவர் உலகக் கோப்பை : நெட் பவுலராக வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் தேர்வு


20 ஓவர் உலகக் கோப்பை : நெட் பவுலராக வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் தேர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:17 PM GMT (Updated: 12 Oct 2021 3:17 PM GMT)

இந்திய அணியின் நெட் பவுலராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார்.

மும்பை 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த  இளம் வேகப்பந்து வீச்சாளர்  24 வயதான அவேஷ் கான். இவர்  ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.மணிக்கு 140-145 கி.மீ வேகத்தில் பந்து வீசும் அவேஷ் கான் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

வரும் 23 ஆம் தேதி 20 ஓவர் உலக கோப்பை  போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நெட் பவுலராக அவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டது.

ஏற்கனவே இந்திய அணியின் நெட் பவுலராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த  21 வயதான உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார்.

Next Story