கிரிக்கெட்

கேமரா வயரில் உரசிய பந்து; சுப்மான் கில்லுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் + "||" + Ball hit on camera wire Good luck to Shubman Gill

கேமரா வயரில் உரசிய பந்து; சுப்மான் கில்லுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

கேமரா வயரில் உரசிய பந்து; சுப்மான் கில்லுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
சுப்மான் கில் அடித்த பந்து ஸ்பைடர் கேமராவின் ஒயரில் பட்டு அதன் பிறகே கீழே இறங்கியது.
துபாய்,

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 4-வது முறையாக கேப்டன் தோனியின் தலைமையில் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. 

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில் 27 ரன்னில், ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது டீப் மிட்விக்கெட் திசையில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் ஆனார். ஆனால் பந்து அந்தரத்தில் பறந்த ஸ்பைடர் கேமராவின் ஒயரில் பட்டு அதன் பிறகே கீழே இறங்கியது தெரியவந்ததால் விதிமுறைப்படி அந்த பந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. 

இதனால் சுப்மான் கில் தொடர்ந்து விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றார். இந்த முடிவால் டோனி கடும் அதிருப்திக்குள்ளானார். தொடர்ந்து ஆடிய சுப்மான் கில் 51 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.