20 ஓவர் கிரிக்கெட்டில் 400 விக்கெட் - ரஷித்கான் புதிய மைல்கல்


20 ஓவர் கிரிக்கெட்டில் 400 விக்கெட் - ரஷித்கான் புதிய மைல்கல்
x
தினத்தந்தி 7 Nov 2021 10:42 PM GMT (Updated: 7 Nov 2021 10:42 PM GMT)

நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித்கான் மாட்டின் கப்திலை கிளீன் போல்டாக்கினார்.

சார்ஜா,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு போட்டியின்றி முன்னேறியது. 

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், நியூசிலாந்து வீரர் மாட்டின் கப்திலை கிளீன் போல்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் ரஷித்கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது. 

இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பவுலர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித்கான் பெற்றார். இந்த வகையில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரின் (425 விக்கெட்), தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

Next Story