கிரிக்கெட்

வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு + "||" + Bangladesh batsman Mahmudullah retires from Test cricket

வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு
வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா 2009 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமானார்.

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

மஹ்மதுல்லா 2009 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமானார்  . 50 போட்டிகளில் விளையாடி 33.49 சராசரியில் 2914 ரன்களை எடுத்துள்ளார் , இதில் 5 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களும்  மற்றும் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து மஹ்மதுல்லா  வெளியிட்டுள்ள  டுவிட்டர்  பதிவில் ;

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எனது அறிமுக போட்டியிலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை பெற்றிருக்கிறேன் , டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு அற்புதமான பயணம். எனது குடும்பத்தினர், அணியினர், பயிற்சியாளர்கள் அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.என்றார்