கான்பூர் டெஸ்ட்: இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரு இந்தியர்கள்..!


கான்பூர் டெஸ்ட்: இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரு இந்தியர்கள்..!
x
தினத்தந்தி 29 Nov 2021 12:49 PM GMT (Updated: 29 Nov 2021 12:49 PM GMT)

கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது.

கான்பூர்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம், வில்லியம், கேப்டன் கேன் வில்லியம்சன் தவிற மற்ற பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இந்திய அணி வெற்றிப்பாதைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணியில் விளையாடி வரும் மும்பையில் பிறந்த படேல் மற்றும் மற்றும் கர்நாடகாவில் பிறந்த ரவீந்திரன் இருவரும் இணைந்து தோல்வியின் விளிம்பில் இருந்த நியூசிலாந்து அணியை காப்பாற்றினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி 12 ஓவர்களை திறம்பட சமாளித்த அவர்களின் ஆட்டம் நியூசிலாந்துக்கு புது நம்பிக்கையை அளித்தது.

ரவீந்திரன் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்னும், அஜாஸ்படேல் 23 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். இந்தியாவில் பிறந்த இருவரும் நியூசிலாந்து அணிக்காக விளையாடி தோல்வியின் பாதையில் சென்றுகொண்டிருந்த அணியை மீட்டு சமன் செய்தது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கினாலும், நியூசிலாந்து அணிக்கு அவர்களின் பங்களிப்பு நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.


Next Story