இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம்: தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து முடிவு?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Dec 2021 12:16 AM GMT (Updated: 4 Dec 2021 12:16 AM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் வருகிற 9-ந் தேதி முதல் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் 17-ந் தேதி தொடங்குகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருவாகி இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமைக்ரான்’ வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்ஆப்பிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா?, கொரோனா உயிர் பாதுகாப்பு நடைமுறை காரணமாக இந்த தொடரில் போட்டியின் எண்ணிக்கை குறைக்கப்படுமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. புதிய வைரஸ் பரவலால் தென்ஆப்பிரிக்க தொடர் உள்ளிட்ட வருங்கால போட்டிகளின் போது என்ன மாதிரியான மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் விவரத்தையும் 8 அணிகளும் சமீபத்தில் அறிவித்து விட்டன. இதனால் அடுத்த கட்டமாக வீரர்களுக்கான மெகா ஏலத்தை எப்போது? நடத்தலாம் என்பது குறித்து பொதுக்குழுவில் ஆலோசித்து தேதி இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியின் புதிய வரவான லக்னோ அணியை வாங்கி இருக்கும் சி.வி.சி. கேப்பிட்டல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் சூதாட்டம் நடத்தும் நிறுவனத்துடன் தொடர்பு வைத்து இருப்பதாக எழுந்து இருக்கும் சர்ச்சை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படு


Next Story