ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகல்


ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகல்
x
தினத்தந்தி 14 Dec 2021 5:10 AM GMT (Updated: 2021-12-14T10:40:44+05:30)

ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் .

 பிரிஸ்பேன்,

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. 

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி  வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் போட்டியிலிருந்து  விலகியுள்ளார் .

முதலாவது டெஸ்டின் போது காயம் ஏற்பட்ட காரணத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.எனவே 2-வது டெஸ்டில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்  ரிச்சர்ட்சன் அல்லது மைக்கேல்  நெசர்  சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. 


Next Story