10 விக்கெட் நாயகன் அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கம் ..!


10 விக்கெட் நாயகன் அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கம் ..!
x
தினத்தந்தி 24 Dec 2021 12:08 AM GMT (Updated: 2021-12-24T05:59:07+05:30)

அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

உள்நாட்டில் வருகிற 1-ந்தேதி தொடங்கி நடக்கும் வங்காளதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சரித்திரம் படைத்த சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல்  நியூசிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். 

வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு சுழற்பந்து வீச்சாளர்களில் ரச்சின் ரவீந்திரா மட்டும் தேர்வாகி இருக்கிறார். முழங்கை காயத்தால் அவதிப்படும் கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெறவில்லை. டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story