கொரோனா தொற்று எதிரொலி: இன்றைய பிக்பாஷ் லீக் போட்டி ரத்து


கொரோனா தொற்று எதிரொலி: இன்றைய பிக்பாஷ் லீக் போட்டி ரத்து
x
தினத்தந்தி 30 Dec 2021 7:29 AM GMT (Updated: 2021-12-30T12:59:52+05:30)

இன்று நடைபெற இருந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன.

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன்  ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற இருந்த போட்டியில்  மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. 

தொற்று  உறுதிசெய்யப்பட்ட அதிகாரியுடன் தொடர்பில் இருந்த அனைத்து வீரர்களுக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை பரிசிசோதனை முடிவுகள் வரவில்லை என்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.

Next Story