நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 April 2022 2:07 AM GMT (Updated: 2022-04-04T07:37:58+05:30)

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

ஹாமில்டன்,

நெதர்லாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.Next Story