வெறும் 10-12 பந்துகள் விளையாடும் வீரரை எப்படி தேர்வு செய்வீர்கள் - தினேஷ் கார்த்திக் குறித்து கம்பீர் கருத்து


வெறும் 10-12 பந்துகள் விளையாடும் வீரரை எப்படி தேர்வு செய்வீர்கள்  - தினேஷ் கார்த்திக் குறித்து கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 18 Sep 2022 3:48 AM GMT (Updated: 18 Sep 2022 4:45 AM GMT)

ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.

மும்பை,

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்

இதில் மிகவும் முக்கியமான கேள்வியாக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா ? இல்லை யாராவது ஒருவர் மட்டும் தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட் க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது.இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்

இந்நிலையில், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் ஆட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியதாவது ;

ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் சேர்த்து அணியில் ஆடவைக்க முடியாது. அப்படி செய்தால் 6வது பந்துவீச்சாளரை இழக்க நேரிடும் .உலக கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு 6வது பந்துவீச்சாளர் இல்லாமல்போக முடியாது .அப்படி இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமென்றால் சூர்யகுமார், ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை டிராப் செய்து ரிஷப்பை தொடக்க வீரராக களம் இறக்கலாம்.

வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்.தினேஷ் கார்த்திக் மேல்வரிசையில் இறங்க விரும்புவதில்லை. ஆனால் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்டுக்கு உள்ளது என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும். என தெரிவித்துள்ளார்.


Next Story