ரஷித் கானுடன் இணைந்து பந்துவீச விரும்புகிறேன் - இந்திய சுழற்பந்து வீச்சாளர்


ரஷித் கானுடன் இணைந்து பந்துவீச விரும்புகிறேன் - இந்திய சுழற்பந்து வீச்சாளர்
x

Image Courtesy: Afghanistan Cricket Board

தினத்தந்தி 21 Sep 2022 11:42 AM GMT (Updated: 21 Sep 2022 11:52 AM GMT)

ரஷித் கானுடன் இணைந்து பந்துவீச விரும்புவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.


8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்த டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ம் தேதி மெல்போர்னில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல்லில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ரஷித் கானுடன் இணைந்து பந்து வீச விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,

நான் மித வேகப்பந்து வீச்சாளராக எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். ஆனால் பின்னர் லெக் ஸ்பின்னுக்கு மாறினேன். கிரிக்கெட் மீது எனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன் மற்றும் லெக் ஸ்பின் கலையை ரசித்தேன். நான் 11-12 வயதில் கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்து விளையாட ஆரம்பித்தேன் என்று கூறினார்.

மேலும், ஐபிஎல் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஐபிஎல்லில் சீனியர் வீரர்கள், சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் போது அதிகமாக கற்றுகொண்டேன். ஐபிஎல்லில் முன்னனி வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலும் ஒருவர். அவருடன் இணைந்து பந்து வீசுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், ரஷித் கானுடன் பந்துவீச விரும்புகிறேன், ஏனென்றால் 'பார்ட்னர்ஷிப்பில்' எப்படி பந்து வீசுவது என்பதை நான் கற்றுக்கொள்வேன், என்று கூறினார்.


Next Story