டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று - நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
சேலம்,
7வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதில் நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.