ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இளம் வீரர் விலகல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இளம் வீரர் விலகல்
x

image courtesy: PTI

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த விஷ்ணு வினோத் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விஷ்ணு வினோத் காயம் காரணமாக எஞ்சிய சீசனில் இருந்து விலகியுள்ளார்.

விஷ்ணு வினோத்திற்கு பதிலாக சவுராஷ்டிராவை சேர்ந்த மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹர்விக் தேசாயை மும்பை நிர்வாக ஒப்பந்தம் செய்துள்ளது.


Next Story