லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு...!


லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு...!
x

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் லக்னோ அணி ஆட உள்ளது.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story