டிஎன்பிஎல்: மதுரை அணி அபார பந்துவீச்சு..! 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது திருச்சி

டிஎன்பிஎல்: மதுரை அணி அபார பந்துவீச்சு..!  105 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது திருச்சி
x

மதுரை அணியில் சரவணன் 3 விக்கெட்டும் , குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சேலம்,

8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் திருச்சி அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.திருச்சி அணியில் அதிகபட்சமாக சிறப்பாக ஆடி மணி பாரதி 48 ரன்கள் எடுத்தார்.

மதுரை அணியில் சரவணன் 3 விக்கெட்டும் , குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Next Story