தொடரை வெல்லப்போவது யார்..? - கடைசி டி20 போட்டியில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்..!


தொடரை வெல்லப்போவது யார்..? - கடைசி டி20 போட்டியில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @ZimCricketv

இதுவரை நடந்து முடிந்துள்ள 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story