கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது கோவா + "||" + ISL Football

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது கோவா

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது கோவா
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் டெல்லியை பந்தாடியது கோவா அணி.
புதுடெல்லி,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 5-1 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான டெல்லி டைனமோசை பந்தாடியது. டெல்லி அணியில் முன்னணி வீரர் கேப்ரியல் சிசெரோ 66-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால், கோவா அணியின் வலுவான ‘பிடி’யை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 5-வது லீக்கில் விளையாடிய கோவா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பெங்களூருவில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- பெங்களூரு எப்.சி. பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 8 மணிக்கு மும்பை சிட்டி- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி முதல் வெற்றி, 3-1 கோல் கணக்கில் சென்னையை சாய்த்தது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றிபெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.