கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்– மும்பை ஆட்டம் டிரா + "||" + ISL Football: Jamsetpur - Mumbai Match Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்– மும்பை ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்– மும்பை ஆட்டம் டிரா
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.– மும்பை சிட்டி அணிகள் சந்தித்தன.

ஜாம்ஷெட்பூர்,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.– மும்பை சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. அஜூகா (ஜாம்ஷெட்பூர்), தியாகோ சான்டோஸ் (மும்பை) தலா 2 கோல்கள் போட்டனர். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி– கோவா அணிகள் மோதுகின்றன.