கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது டெல்லி + "||" + ISL Football: Delhi fell to Jamshedpur

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது டெல்லி

ஐ.எஸ்.எல். கால்பந்து:
ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது டெல்லி
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோசுடன் மோதியது.
ஜாம்ஷெட்பூர்,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோசுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக களம் இறங்கிய ஜாம்ஷெட்பூருக்கு, டெல்லி வீரர் கலு உச்சே 20 மற்றும் 22-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து பதிலடி கொடுக்க தீவிரம் காட்டிய ஜாம்ஷெட்பூர் அணி சீக்கிரமாகவே சரிவில் இருந்து நிமிர்ந்தது. 29-வது நிமிடத்தில் டிரியும், 54-வது நிமிடத்தில் யம்னாம் ராஜூவும் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர். இதன் பின்னர் ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில், 4 நிமிடங்கள் எஞ்சி இருந்த போது ஜாம்ஷெட்பூர் வீரர் டிரின்டேட் கோன்கால்வ்ஸ் கோல் அடித்து, அமர்க்களப்படுத்தினார். அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லியை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணிக்கு இது 8-வது தோல்வியாகும்.

கொச்சியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.