கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 7-வது வெற்றி + "||" + ISL Football Chennai team win 7th

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 7-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 7-வது வெற்றி
8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தா,

கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை வீழ்த்தியது. கொல்கத்தா அணியில் மார்ட்டின் பேட்டர்சனும் (44-வது நிமிடம்), சென்னை அணியில் மைல்சன் ஆல்வ்ஸ் (51-வது நிமிடம்), ஜெஜெ லால்பெகுலா (64-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டனர். நட்சத்திர வீரர் லால்பெகுலாவுக்கு இந்த சீசனில் அடித்த 7-வது கோலாக இது அமைந்தது.

12-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என்று 23 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணிக்கு 5-வது தோல்வியாகும். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு-கவுகாத்தி அணிகள் சந்திக்கின்றன.