கால்பந்து

லா லிகா கால்பந்து பார்சிலோனா அணியின் ஆட்டம் டிராவில் முடிந்தது + "||" + La Liga football ended in the draw of the Barcelona team

லா லிகா கால்பந்து பார்சிலோனா அணியின் ஆட்டம் டிராவில் முடிந்தது

லா லிகா கால்பந்து பார்சிலோனா அணியின் ஆட்டம் டிராவில் முடிந்தது
லா லிகா கால்பந்து லீக் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
பார்சிலோனா,

லா லிகா கால்பந்து லீக் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா-எஸ்பான்யோல் அணிகள் மோதின. 66-வது நிமிடத்தில் எஸ்பான்யோல் அணி வீரர் ஜெரார்டு மொரினோ கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி பதில் கோல் திருப்பியது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி லயோனல் மெஸ்சி கோலை நோக்கி அடித்த பந்தை பின்கள வீரர் ஜெரார்ட் பிகே கோலுக்குள் திருப்பினார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்த சீசனில் கடந்த 22 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சிறப்பை பார்சிலோனா அணி தக்கவைத்தது. நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்-லெவண்டே அணிகள் இடையிலான ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தியது. ஏஞ்சல் கோர்ரியா 59-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.


இந்த போட்டியில் பார்சிலோனா அணி இதுவரை 22 ஆட்டங்களில் ஆடி 18 வெற்றி, 4 டிராவுடன் 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.