கால்பந்து

மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது + "||" + State wide Football tournament started

மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது

மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது
திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.
திருச்சி,

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி (திருச்சி), ஜி.ஆர்.டி. கல்லூரி (கோவை) ஆகிய அணிகள் மோதின. இதில் ஜமால் முகமது கல்லூரி வெற்றி பெற்றது. தொடர்ந்து ரத்தினம் கல்லூரி (கோவை), ஜோசப் கல்லூரி (திருச்சி) ஆகிய அணிகள் மோதின.

இதில் ரத்தினம் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதே போன்று நாசரேத் கல்லூரி (சென்னை), கோபி கல்லூரி ஆகிய அணிகள் மோதின. இதில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.

நேற்று மொத்தம் 7 போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. அன்று மாலை இறுதி போட்டி நடக்கிறது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

இதில் முன்னாள் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் லட்சுமணன் கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.