கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 13–வது வெற்றி + "||" + ISL Football: Bangalore team's 13th win

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 13–வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 13–வது வெற்றி
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் நடந்த 86–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 2–0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்தது.

பெங்களூரு,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் நடந்த 86–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 2–0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்தது. இந்த ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆகுமோ என்று நினைத்தவேளையில், கடைசி நிமிடங்களில் பெங்களூரு வீரர்கள் மிகுவும், உதான்டா சிங்கும் அதிரடியாக கோல் அடித்து அசத்தினர். லீக் சுற்றை முடித்து விட்ட பெங்களூரு அணி 13 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி என்று 40 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் வகிக்கிறது. அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட கேரளா 6 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 25 புள்ளிகள் பெற்று 6–வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி–புனே அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன.