கால்பந்து

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்துஸ்தான் அணி வெற்றி + "||" + Senior Division League football Hindustan team wins

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்துஸ்தான் அணி வெற்றி

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்துஸ்தான் அணி வெற்றி
சீனியர் டிவிசன் லீக் கால்பந்து இந்துஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் விவா சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை சுங்க இலாகா அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி. அணியை சாய்த்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ரிசர்வ் வங்கி-ஐ.சி.எப். (பிற்பகல் 2 மணி), சென்னை யுனைடெட் எப்.சி.-இந்தியன் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன. முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்வராஜ் எப்.சி. அணி 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை தபால் துறை அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் டான்போஸ்கோ இளைஞர் மையம் அணியை வீழ்த்தியது. இன்று மாலை நடைபெறும் முதல் டிவிசன் ஆட்டங்களில் ரங்கூன் எப்.சி.-இந்திய உணவு கழகம், ஏ.ஜி.அலுவலகம்-நேதாஜி எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.