டிவிசன் லீக் கால்பந்து சென்னை எப்.சி. அணி வெற்றி


டிவிசன் லீக் கால்பந்து சென்னை எப்.சி. அணி வெற்றி
x
தினத்தந்தி 30 March 2018 8:30 PM GMT (Updated: 30 March 2018 8:07 PM GMT)

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் சென்னை சிட்டி எப்.சி.–விவா சென்னை அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணி 2–1 என்ற கோல் கணக்கில் ஆரோஸ் எப்.சி. அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் சீனியர் டிவிசன் லீக் ஆட்டங்களில் சுங்க இலாகா–ஐ.சி.எப். (பிற்பகல் 2 மணி), இந்துஸ்தான் ஈகிள்ஸ்–சென்னை யுனைடெட் எப்.சி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் கலால் வரி அணி 3–0 என்ற கோல் கணக்கில் ரங்கூன் எப்.சி. அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்வராஜ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வென்றது. இன்று நடைபெறும் முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ்–தபால் துறை (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Next Story