உலக கோப்பை கால்பந்து: பிரேசில் வீரர் டேனி ஆல்வ்ஸ் விலகல்


உலக கோப்பை கால்பந்து: பிரேசில் வீரர் டேனி ஆல்வ்ஸ் விலகல்
x
தினத்தந்தி 12 May 2018 9:30 PM GMT (Updated: 12 May 2018 9:18 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது.

ரியோடி ஜெனீரோ, 

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பிரேசில் முன்னணி வீரர் டேனி ஆல்வ்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடிய போது கால்முட்டியில் காயமடைந்த டேனி ஆல்வ்ஸ் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைய வாய்ப்பில்லை. 35 வயதான டேனி ஆல்வ்ஸ் பிரேசில் அணிக்காக 107 ஆட்டங்களில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நட்சத்திர வீரர் நெய்மார் காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வு எடுத்து வரும் நிலையில், டேனி ஆல்வ்சின் விலகல் பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கான பிரேசில் அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

Next Story